Tuesday, March 8, 2011

புரியாமல்.....

நடந்தவை...
என்ன தேவை இருக்கிறது?
       உன்னைப் பார்க்க...
என்ன தேவை இருக்கிறது?
      உன்னிடம் பேச...
என்ன தேவை இருக்கிறது?
     நாம் பழக...
என்ன தேவை இருக்கிறது?
    பரஸ்பரம் பிடித்துப்போக...
என்ன தேவை இருக்கிறது?
   அன்பு செய்ய....
என்ன தேவை இருக்கிறது?
   பித்தம் தோன்ற...
என்ன தேவை இருக்கிறது?
   கவிதை புனைய....
தேவை இருந்ததோ என்னவோ...
வழக்கம்போல் உணர்வும் புரியவில்லை..
உறவும் புரியவில்லை ...
எனினும் நாம்...."நாம்"

Monday, February 7, 2011

உணர்வுகள் புரிவதில்லை...!!

தனிமை என்னை திண்ணத் தொடங்கியது!
வெறுமை என்னை ஆட்கொண்டது!
அப்போதும் நீ வரவில்லை ...
வாழ்வதே ஆதாரம் அற்று போனப்பின்னும்
வாழ்வாதாரம் தேடி அலைந்தேன் 
அப்போதும் நீ வரவில்லை ...
நாற்புறமும் இடிவிழுந்த போதும்
நான் நானாய் இருந்தேன்-உனக்காக
அப்போதும் நீ வரவில்லை ...
வெகுநாளாய் நான் கண்ட கனவு
வெகுதூரம் போய்விட்டதென்றார்கள்
அப்போதும் நீ வரவில்லை ...
நீ வருவாய் என எண்ணிக்கொண்டு
நீண்டநேரம் வாசலில் தவம் கிடந்தேன் 
அப்போதும் நீ வரவில்லை ...
உணவளிக்கவில்லை,ஆதரிக்கவில்லை
உண்மைபேசவில்லை,அன்புகாட்டவில்லை
உறங்கவைக்கவில்லை,அரவணைக்கவில்லை
நீயும் இல்லை...
நான் இருந்தும் இல்லை...
மறக்கமுடியவில்லை அதை மறைக்கதொன்றவில்லை
எப்பொழுதும் உனக்காய் இருக்கிறேன்
எனக்குத்தெரியும்------------------------------
எப்படியும் நீ வரப்போவதில்லை!
                                               ------தியா

Wednesday, January 19, 2011

I want back....
      The days I have lost
               The time I have spent
The days of utter joy
The times of getting scoldings from my mom
The days of silly fights
The times of meaningless laughs
The day I was born :)
        The day I started walking
The day I started talking
        The day I got my first kiss
The days I celebrated
     The days cried 
The day I started to lie ;)
The day I started admiring my Dad
The day I started loving my siblings
The day I got my first friend
The day I hated someone    
The day I started succeeding
The day I cherished
The days of insult
The time I met my first crush
The times I loved myself
The times I learnt a new thing
The times I stared at my teacher
The times of gossip
The times of realization
The moments of joyful experiences...
The times that I wanted to freeze...
...I want them back,though I know I won't!

                                                          -diya