Monday, February 7, 2011

உணர்வுகள் புரிவதில்லை...!!

தனிமை என்னை திண்ணத் தொடங்கியது!
வெறுமை என்னை ஆட்கொண்டது!
அப்போதும் நீ வரவில்லை ...
வாழ்வதே ஆதாரம் அற்று போனப்பின்னும்
வாழ்வாதாரம் தேடி அலைந்தேன் 
அப்போதும் நீ வரவில்லை ...
நாற்புறமும் இடிவிழுந்த போதும்
நான் நானாய் இருந்தேன்-உனக்காக
அப்போதும் நீ வரவில்லை ...
வெகுநாளாய் நான் கண்ட கனவு
வெகுதூரம் போய்விட்டதென்றார்கள்
அப்போதும் நீ வரவில்லை ...
நீ வருவாய் என எண்ணிக்கொண்டு
நீண்டநேரம் வாசலில் தவம் கிடந்தேன் 
அப்போதும் நீ வரவில்லை ...
உணவளிக்கவில்லை,ஆதரிக்கவில்லை
உண்மைபேசவில்லை,அன்புகாட்டவில்லை
உறங்கவைக்கவில்லை,அரவணைக்கவில்லை
நீயும் இல்லை...
நான் இருந்தும் இல்லை...
மறக்கமுடியவில்லை அதை மறைக்கதொன்றவில்லை
எப்பொழுதும் உனக்காய் இருக்கிறேன்
எனக்குத்தெரியும்------------------------------
எப்படியும் நீ வரப்போவதில்லை!
                                               ------தியா